அரியலூர் அருகே உள்ள கீழப்பலூர் துணை மின் நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றுபவர் கனகசபை (வயது 50). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இருவருக்கும் மூன்று குழந்தைகள் வீதம் ஆறு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று (மே18) மாலை பணிக்காக கனகசபை அலுவலகம் சென்றார். பின்னர், இன்று காலை மாற்று ஊழியர் செல்வகுமார் என்பவர் அலுவலகத்திற்கு சென்றபோது, கனகசபை கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்த ஊழியர், காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடம் சென்ற காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், மாலை 6 முதல் இரவு 12 மணி வரை கனகசபை பணியில் இருந்ததும், அதன்பிறகு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், அவரது கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது பதவி உயர்வு பிரச்னையா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நிலத்தகராறில் கணவன், மனைவி வெட்டிக் கொலை...!