ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகத்தில் 'கொரோனா வைரஸ்' விழிப்புணர்வு கூட்டம்

author img

By

Published : Mar 6, 2020, 8:24 AM IST

அரியலூர்: கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும். இந்நோய் உள்ள நபர், இருமும் போதும், தும்மும் போதும் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.

விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய ஆட்சியர்

மேலும் ஒவ்வொருவரும், எப்போதும் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். இந்நோய் உள்ளவர்கள், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் பங்கு பெறுவதையும் தவிர்க்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் இந்நோய் குறித்து அச்சப்படத் தேவையில்லை. இது குறித்து சந்தேகங்கள் இருந்தால் 24 மணி நேர உதவி எண் ஜீரோ 11 23 97 80 46 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம், என்று இக்கூட்டத்தில் பேசப்பட்டது.

இதையும் படிங்க: மதுரையில் கொரோனா பாதிப்பு இல்லை - மதுரை மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.