காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு கிராம தொழில் வாரியத்தின் காதி கிராப்ட் நிலையத்தில் சிறப்பு விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடங்கி வைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் சென்றார். சிறப்பு விற்பனையை தொடக்கி வைத்த அவர், அந்நிலையத்தில் தடைசெய்யப்பட்ட தேநீர் கப்புகள், பிளாஸ்டிக் பைகள் இருப்பதை கவனித்துள்ளார்.
இதனால், காதி கிராப்ட் நிலைய மேலாளரை அழைத்து, அங்குள்ள தடைசெய்யப்பட்ட அனைத்துப் பிளாஸ்டிக் பொருட்களையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
மேலும், இதனை வாங்கிய கடைகளைக் கண்டறிந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:
"நாம் தினமும் டீக்கு பதிலாக பிளாஸ்டிக்கை குடிக்கிறோம்" - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்