அரியலூர் மாவட்டம், ஓட்ட கோவில் அருகே உள்ள சாலைக்குறிச்சி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை, அம்மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆய்வு செய்தார்.
அப்போது சாலையின் நீளம், அகலங்களை அலுவலர்களை அளந்து காண்பிக்கக் கோரி ஆய்வு செய்த அவர், தொடர்ந்து அதன் தரத்தையும் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து சாலையின் இருபுறமும் முறையான வாய்க்கால் அமைக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்ட ஆட்சியர், பணியில் ஏதேனும் தவறுகள் நடந்தால் அலுவலர்களிடம் பொது மக்கள் முறையிட்டு, பணிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க : சுவரை துளைத்து 50 சவரன்கொள்ளை!