நாடெங்கிலும் இன்று (ஜூன் 12) குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நாடொங்கும் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட குழந்தை நலத் துறை - தொழிலாளர் துறை சார்பில் அரியலூர் பேருந்து நிலையம் எதிரே குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து விளக்கும் வகையில் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் இந்த மனிதச் சங்கலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அரியலூர் கோட்டாட்சியர் சத்யநாராயணன் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி வாசித்து கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.