ETV Bharat / state

கார் - லாரி சாலைவிபத்து - இருவர் உயிரிழந்த சோகம்

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

jayankondam
author img

By

Published : Nov 23, 2019, 7:28 AM IST

கும்பகோணம் வீரையா நகரைச் சேர்ந்த சுந்தரம் (80) இவரும் பெரம்பலூரைச் சேர்ந்த ராஜராஜன் (35) என்வரும் நேற்று மாலை விருத்தாசலத்திலிருந்து கும்பகோணம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

ராஜராஜன் காரை ஓட்டிச் சென்றுள்ளார். ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற லாரியுடன் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் நசுங்கி அதில் பயணம் செய்த ராஜராஜன், சுந்தரம் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லாரிக்கடியில் நசுங்கி கிடக்கும் கார்

விபத்து நடந்ததும் லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் அப்பளம் நொறுங்கியது போல் இருந்த காரில் சிக்கிய சடலங்களை கதவை உடைத்து மீட்டனர்.

தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்விற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு;மற்றொருவர் படுகாயம்!

Intro:அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்புBody: கும்பகோணம் வீரையா நகரைச் சேர்ந்த சுந்தரம் இவரும் பெரம்பலூரை சேர்ந்த ராஜராஜன் இருவரும் மாலை விருத்தாசலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

ராஜராஜன் காரை ஓட்டிச் சென்றார். ஜெயங்கொண்டம் அருகே உள்ள வட வீக்கம் கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற லாரியுடன் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் கார் நசுங்கி காரில் பயணம் செய்த ராஜராஜன் சுந்தரம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

காரில் இறந்து கிடந்த இருவரையும் வெளியே எடுப்பதற்காக ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் காரின் கதவை உடைத்து வெளியே எடுத்தனர்.

Conclusion:சம்பவ இடத்தை எஸ் பி சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டனர். திடீரென்று இருவரும் எதற்காக விருத்தாசலம் நோக்கி சென்று வந்தனர் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.