அரியலூர் மாவட்டம் தூத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் மணிவண்ணன். இவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது சதீஷ்குமார், ராம்கி ஆகியோர் உதவி ஆய்வாளரை கல்லை போட்டு கொலை செய்ய முயன்றனர்.
இது தொடர்பாக மணிவண்ணன் விக்ரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சந்திரசேகர், ராம்கி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் ஆண்டிமடம் அருகே உள்ள கிராமத்தில் தந்தையை கொலை செய்த மகன் கலியமூர்த்தி என்பவரையும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். காவல் துறையினரின் விசாரணையில் மூன்று பேர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
ஆகவே இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கினார். அதன்படி உதவி ஆய்வாளர் தாக்கிய இருவர், தந்தையை கொலை செய்த மகன் ஆகிய மூவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: அரசு முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்தவர் கைது!