அரியலூர் மாவட்டம் உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக இறந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும், காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் பாருங்க: சென்னையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு