ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ரயில்வே பணியாளர்கள் அரியலூர் ரயில் நிலையத்திற்கு உள்ளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 8ஆம் தேதிவரை விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, திருச்சி கோட்ட உதவி செயலாளர் செல்வகுமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 30க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பொருளாதார நெருக்கடிகளை காரணம் காட்டி, ஒரு நாள் சம்பளம் பிடித்தம் மற்றும் 18 மாத அகவிலைப்படி பிடித்தம் செய்வதால் ஒவ்வொரு தொழிலாளிக்கும் குறைந்தபட்சமாக ரூ.55 ஆயிரம்வரை நஷ்டம் ஏற்படுவதால் அதனையும் கைவிட வேண்டும்.
புதிய லேபர் கோடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய லேபர் நலச்சட்டத்தையே பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அஸாம் திரும்பிய தொழிலாளர்கள்!