ETV Bharat / state

2 ரூபாய்க்கு மக்களின் ஏக்கத்தையும், தாகத்தையும் தணித்த கிராம ஊராட்சி...!

அரியலூர்: இரண்டு ரூபாய்க்கு மினரல் வாட்டர் வழங்கிவரும் வெங்கட கிருஷ்ணாபுர கிராம ஊராட்சி, அம்மக்களின் தாகத்தையும், ஏக்கத்தையும் தீர்த்துள்ளது.

2 ரூபாய்க்கு மக்களின் ஏக்கத்தையும், தாகத்தையும் தணித்த கிராம ஊராட்சி...!
2 ரூபாய்க்கு மக்களின் ஏக்கத்தையும், தாகத்தையும் தணித்த கிராம ஊராட்சி...!
author img

By

Published : Sep 9, 2020, 11:27 AM IST

‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறார் ஐயன் வள்ளுவன். அப்படி ஐயனின் வாக்குப்படிப் பார்த்தால் நீர் இல்லாமல் இவ்வுலகமே இயங்காதெனில், இவ்வுலகில் வாழும் உயிர்கள் எப்படி வாழ முடியும் நீரின்றி. உலகம் உயிர்ப்புற்று விளங்க அடிப்படை ஆதாரமாக இருப்பது நீராகும்.

மனிதர்கள் உணவு உண்ணாமல் கூட இருந்திட இயலும். நீரினைப் பருகாமல் இருப்பது என்பது எளிதான செயல் அல்ல. உலகம் உய்யவும், உயிர்கள் வாழவும் மிகமிக அவசியம் நல்ல தண்ணீர் தேவையாகும்.

அப்படி தண்ணீரின் தேவையை உணர்ந்த ஊராட்சி ஒன்று நீரை வடிக்கட்டி நன்னீராக வழங்குகிறது.

அரியலூர் மாவட்டம் வெங்கட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் சுமார் 325 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாய குடிமக்கள் என்பதால் மினரல் வாட்டர் வாங்குவதற்கு எல்லாம் போதிய வருமானம் இல்லை. அதனால் அம்மக்கள் குடிப்பதற்கு முன்பு அடிபம்பை மட்டுமே நம்பியுள்ளனர். இதனை உணர்ந்த வெங்கட கிருஷ்ணாபுரம் ஊராட்சி, வெறும் இரண்டு ரூபாய்க்கு தற்போது மினரல் வாட்டரை வழங்கி வருகிறதாம்.

இதுகுறித்து அவரின் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மை கூறுகையில், தான் வீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடிப்பதுபோல் இவ்வூர் மக்களும் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தபோது, அரசு ஊராட்சியில் தூய குடிநீர் வழங்குவதை ஊக்கப்படுத்தியது. அதனைத் தனது ஊராட்சியில் செயல்படுத்த வேண்டும் என அலுவலர்களிடம் போராடி எட்டு லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டத்தை பொதுமக்களுக்காக பெற்றுத் தந்ததாக தெரிவித்தார்.

மினரல் வாட்டர் வழங்கும் வெங்கட கிருஷ்ணாபுர ஊராட்சி, அம்மக்களின் தாகத்தை தீர்த்தது மட்டுமின்றி, மினரல் வாட்டம் ஏக்கத்தையும் தீர்த்துள்ளது என்றே சொல்லலாம்.

இதுகுறித்து ஊரில் வசிக்கும் பரிமளா கூறும்போது, “பில்டர் தண்ணீர் எடுத்து செல்பவர்களை பார்த்தால் ஏக்கமாக இருக்கும். எங்காவது வெளியே சென்றால் கூட பில்டர் தண்ணீர் தான் கேட்டு குடிப்போம். இந்நிலையில் இரண்டு ரூபாய்க்கு பத்து லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் எங்கள் ஊரில் கிடைப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

2 ரூபாய்க்கு மக்களின் ஏக்கத்தையும், தாகத்தையும் தணித்த கிராம ஊராட்சி...!

நன்னீரின் ஏக்கங்களை இத்திட்டம் ஏறக்கெட்டியது மட்டுமின்றி, அம்மக்களுக்கு நலமான வாழ்வு அளித்துள்ளதாக பகிர்கின்றனர் அக்கிராம மக்கள்.

மற்றொரு பெண்மணியான பொன்னம்மாள் கூறும்போது, தான் திருமணமாகி முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஊருக்கு வந்ததிலிருந்து அடிபம்பு தண்ணீரைத்தான் குடிப்பதற்கு பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். தூய குடிநீர் கிடைக்காததால் கல் அடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்கள் ஊரில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்படி சிறப்பான திட்டங்களை சேர்த்த ஊராட்சி பாராட்டுவது மட்டுமின்றி, நம்மை சுற்றியிருக்கும் பகுதிகளுக்கு இத்திட்டத்தை கொண்டுவர முன்னெடுப்பு எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க...உடுமலை ஆணவக்கொலை: சின்னசாமி விடுதலை உத்தரவை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.