ETV Bharat / state

வேலை வேண்டுமா!... அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பணி; கலெக்டர் அறிவிப்பு! - applications are being invited for job

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குவாலிட்டி மேனேஜர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

post of Quality Manager at Ariyalur govt hospital
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பணி
author img

By

Published : Mar 26, 2023, 3:34 PM IST

அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குவாலிட்டி மேனேஜர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, "புதிதாக துவங்கப்பட்டுள்ள அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவமனை தர மேலாளர் (Hospital Quality Manager) ஒரு பதவிக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பமுள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் மருத்துவமனை மேலாண்மைப்பட்டப்படிப்பு (Masters in Hospital Administration / Health Management) மற்றும் பொது சுகாதார துறையில் முதுநிலை பட்டப்படிப்பு (Master of Public Health) (Regular course Not Correspondence Course) / Two Years Experience in Public Health / Hospital Administration முடித்துள்ள, நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல்வர், அரசு அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரியலூர் அவர்களிடம் ஆதார் அட்டை நகல் மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ் நகல்களுடன் சுய முகவரியுடன் கூடிய ஐந்து ரூபாய்க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய தபால் உறையுடன் இணைத்து விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.04.2023 ஆகும்" என அந்த அறிக்கையில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குழந்தைகள் - பெரியவர்களுக்கு இலவச துணி வழங்கிய தன் ஆர்வலர்கள்: மகிழ்ச்சியில் மூழ்கிய கிராமம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.