ETV Bharat / state

அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளம் அனிதா - Anita

நீட் என்ற வார்த்தையை தொலைக்காட்சியில் கேட்கும்போதெல்லாம் தனது மனது சுரீரென்று உள்ளது என அனிதாவின் தந்தை சண்முகம் கூறுகிறார்.

அனிதா
அனிதா
author img

By

Published : Sep 1, 2020, 11:32 AM IST

Updated : Sep 1, 2020, 3:29 PM IST

மூன்று மணி நேர தேர்வினை கொண்டுதான் மாணவர்களின் திறனை கண்டறிய முடியுமா என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கேள்வி எழுப்புகிறார். கரோனா வைரஸ் நோயின் தாக்கம் அதிகரித்துவருவதால் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், சிசோடியா இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆனால், இக்கருத்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துவிட்டனர். அதற்கு காரணமாணவர், அனிதா. அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளமாக இப்பெயர் அனைவரின் மனதிலும் ஒலித்துவருகிறது.

12ஆம் வகுப்பு பொது தேர்வில், 1176 மதிப்பெண்கள் பெற்று மருத்துவர் ஆகும் கனவோடு இருந்த அனிதாவுக்கு நேர்ந்தது அரசு பயங்கரவாதம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய, ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகத்திலிருந்து வந்த அனிதா, கல்வி மூலம் விடுதலை பெற்று ஏழை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். தனியார் நீட் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து ஆண்டு கணக்கில், பயின்ற மாணவர்களுடன் அவரால் போட்டி போட முடியவில்லை.

நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத காரணத்தால் பெரும் சோகத்திலும், மன உளைச்சலிலும் இருந்த அனிதா, தன் இன்னுயிரை 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் ஒன்றாம் தேதி மாய்த்துக் கொண்டார். அவர் இறந்து இன்றோடு மூன்றாண்டுகாலம் ஓடிவிட்டது. ஆனால், டாக்டர் அனிதா உருவாவதைத் தடுத்த நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதனை ஒத்திவைக்க முடியவில்லை.

இதுகுறித்து அனிதாவின் சசோதரர் மணிரத்னம் கூறுகையில், "தமிழ்நாடு அரசானது நீட் தேர்வு வேண்டாம் வேண்டாம் என்று கூறினாலும் நீட் தேர்வு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக் கொண்டே வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் குழப்பத்திலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதனை தவிர்த்து நீட் உண்டு, அதன் மூலம்தான் மாணவர்கள் சேர்க்கை என்று தெரிவித்தால் மாணவர்களின் குழப்பமான சூழ்நிலையை தவிர்க்க முடியும். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அனிதா உயிரிழந்தார். அவரது கனவு இன்னும் நிறைவேறவில்லை" என்றார்.

இன்னொரு அனிதாவை இழந்துவிடக் கூடாது என்ற எண்ணம் அனைவரின் மத்தியில் இருந்தாலும், பல அனிதாக்களின் மருத்துவர் கனவை நாம் தொடர்ந்து இழந்துவருகிறோம். பிரதீபா, ரிது ஸ்ரீ, வைஷ்யா, மோனிஷா, சுப ஸ்ரீ என நீட் தொடர்பான மரணங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. இதனை ஒட்டு மொத்த சமூகத்தின் தோல்வியாகவே நாம் கருத வேண்டும்.

இதுகுறித்து அனிதாவின் தந்தை சண்முகம் கூறுகையில், "நீட் என்ற வார்த்தையை தொலைக்காட்சியில் கேட்கும்போதெல்லாம் தனது மனது சுரீரென்று உள்ளது. ஏழை மக்கள் அனைத்து சமுதாயத்திலும் தான் உள்ளனர் அவர்கள் வாழ்வில் முன்னேற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்றார்

கரோனா காரணமாக, இந்தாண்டு நீட் தேர்வினை ஒத்திவைக்கக் கோரி புதுச்சேரி உள்ளிட்ட ஆறு இந்திய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. அனிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டுமானால், நீட் தேர்வினை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். இதற்கு, மற்ற மாநிலங்களின் ஆதரவையும் பெற வேண்டும். அதனைப் பெற, தமிழ்நாட்டின் போராட்ட உணர்வை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

இதுகுறித்து மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் கூறுகையில், "நீட் தேர்வு எந்த அளவிற்கு கொடுமையானது என்பதற்கு அனிதாவின் மரணம் ஒரு சாட்சி. ஆனால் அனிதா எதற்காக இந்த உயிரை இழந்தார் என்பதை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் அவரது உயிருக்கு மரியாதை அளிக்கும் வகையில் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும். மேலும் உயிர்கள் பலியாவதை தடுத்து நிறுத்தி அனிதாவின் கனவை நனவாக்க வேண்டும்" என்றார்.

அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளம் அனிதா

நீட் தேர்வினை முற்றிலுமாக ரத்து செய்ய ஒரே வழி, கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்ப்பதுதான். ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்தால் மட்டும் இதனை சாத்தியப்படுத்த முடியும்.

இதையும் படிங்க: நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை - கோவையில் மற்றொரு அனிதா?

Last Updated : Sep 1, 2020, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.