அரியலூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அனுப்பிய 60க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள், வெற்றிகரமாக விண்ணில் செயல்பட்டு வருகின்றன. இவை தொலைதொடர்புக்கும் தொலை உணர்வுக்கும் உதவும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது தொடர்பான முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ஆதித்யா ஏவுதள மையம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் அமைய உள்ள இத்தலம், ஸ்ரீஹரிகோட்டாவை விட அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைக்க ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஆஸ்கர் விருதுகள் 2020 - வெற்றியாளர்கள் பட்டியல்