டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1 பிரிவின் தகுதிச்சுற்றுப் போட்டி இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் பங்கேற்றார். இப்போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், அடுத்த இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறுவார்கள்.
ஏழாவது இடம்
போட்டியில் ரூபினாவுக்கு கொடுக்கப்பட்ட ஆறு வாய்ப்புகளில் முறையே 91, 96, 95, 92, 93, 93 என மொத்தமாக 600 புள்ளிகளுக்கு, 560 புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம், அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
-
Tokyo Paralympics, Women's 10m Air Pistol SH1: Rubina Francis qualifies for final
— ANI (@ANI) August 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tokyo Paralympics, Women's 10m Air Pistol SH1: Rubina Francis qualifies for final
— ANI (@ANI) August 31, 2021Tokyo Paralympics, Women's 10m Air Pistol SH1: Rubina Francis qualifies for final
— ANI (@ANI) August 31, 2021
இதையடுத்து, துப்பாக்கிச் சுடுதல் இறுதிப்போட்டி, தொடர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் தொடங்குகிறது.