டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் இன்று (ஜூலை 26) நடைபெற்ற பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி, ஜெர்மனி அணியை சந்தித்தது. முதல் போட்டியில், நெதர்லாந்து அணியுடன் மோதிய இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது.
வீணான பெனால்டி
இதனால், இந்திய அணி இன்றைய போட்டியை மிகவும் கடுமையாக எதிர்கொண்டு விளையாடியது. இருப்பினும், ஜெர்மனி அணி போட்டியின் ஆரம்பத்திலேயே கோல் அடித்து அசத்தியது. அதே நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்தியா வீணடித்தது.
-
A spirited performance from the Indian Women's team but it just wasn't enough.
— Hockey India (@TheHockeyIndia) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
We go again on Wednesday. 💪#GERvIND #IndiaKaGame #TokyoTogether #Tokyo2020 #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/Bn4O918Vox
">A spirited performance from the Indian Women's team but it just wasn't enough.
— Hockey India (@TheHockeyIndia) July 26, 2021
We go again on Wednesday. 💪#GERvIND #IndiaKaGame #TokyoTogether #Tokyo2020 #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/Bn4O918VoxA spirited performance from the Indian Women's team but it just wasn't enough.
— Hockey India (@TheHockeyIndia) July 26, 2021
We go again on Wednesday. 💪#GERvIND #IndiaKaGame #TokyoTogether #Tokyo2020 #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/Bn4O918Vox
அடுத்தடுத்து, கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் இந்திய அணியால் அதை பயன்படுத்திக்கொள்ள இயலவில்லை. மறுமுனையில், ஜெர்மனி அணி கடைசி 20 நிமிடங்களில் கோல் அடித்து ஆட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. இதனால், ஆட்டநேர முடிவில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
அடுத்த போட்டி
இந்திய மகளிர் ஹாக்கி அணி வரும் ஜூலை 28ஆம் தேதி இங்கிலாந்து அணியையும், ஜூலை 31ஆம் தேதி தென்னாப்பிரிக்கா அணியையும் சந்திக்கிறது. மகளிர் ஹாக்கியின் நாக்-அவுட் போட்டிகள் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிங்க: நாடு திரும்பிய டோக்கியோ நாயகி... அரசு கௌரவம்