டோக்கியோ ஒலிம்பிக்கில் கோகுக்கிகன் அரங்கில் இன்று (ஜூலை.30) பெண்களுக்கான குத்துச்சண்டை (64-69 கிலோ) போட்டிகளின் இரண்டாவது காலிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், அசாமைச் சேர்ந்த லோவ்லினா போர்கோஹெய்ன், சீன தைபேயின் நீன்-சின் சென்னை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
குத்துச் சண்டை போட்டிகளில் பொதுவாக இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும் நிலையில், இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள லோவ்லினா, இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தை உறுதிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
முன்னதாக மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு பளு தூக்குதல் போட்டியில் வென்று இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் சேர்த்துள்ள நிலையில், எட்டாம் நாளான இன்று இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: முதலிடத்தில் சீனா; 46இல் இந்தியா!