டோக்கியோ: நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்புள்ள வீராங்கனையான கமல்பிரீத் கவுர் பங்கேற்கும் வட்டு எறிதல் இறுதிப்போட்டி தொடரின் 11ஆவது நாளான நாளை (ஆக.2) நடக்க இருக்கிறது. அப்போட்டியைத் தவிர்த்து, டூட்டி சந்த், இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்கும் போட்டியும் நாளை நடைபெறுகிறது.
டூட்டி சந்த் - தடகளம்
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தகுதிச்சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்த டூட்டி சந்த், நாளை 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கிறார்.
கமல்பிரீத் கவுர் - தடகளம்
25 வயதான கவுர் டோக்கியோ ஒலிம்பிக்கின் வட்டு எறிதல் இரண்டாவது தகுதிச்சுற்றில் 64மீ தூரத்துக்கு வட்டெறிந்து பதக்கத்திற்கான சுற்றுக்கு தகுதிப்பெற்றார். நாளை நடைபெறும் பதக்கச் சுற்றில் அவர் நிச்சயம் இந்தியாவிற்கு பதக்கம் வென்று தருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி
குரூப் 'ஏ' பிரிவில் நான்காவது இடத்தை பிடித்து காலிறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, நாளை ஆஸ்திரேலிய மகளிர் அணியுடன் மோதுகிறது. ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் விளையாடிய ஐந்து போட்டியிலும் வென்று குரூப் 'பி' பிரிவில் முதல் இடத்தைப் பிடித்திருந்தது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 13 கோல்களை அடித்து, 1 கோலை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: பி.வி. சிந்துவிற்கு குவியும் பாராட்டுகள்; ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!