மெக்சிகோ நாட்டில் இந்தாண்டிற்காக மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடர், அந்நாட்டிலுள்ள அகாபுல்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் சுவிச்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ஸ்டான் வாவ்ரிங்கா, அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய வாவ்ரிங்கா முதல் செட் கணக்கை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் நடைபெற்ற இரண்டாவது செட்டுக்கான ஆட்டத்தில் பிரான்சிஸ் அசத்தலாக விளையாடி 7-6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றி வாவ்ரிங்காவிற்கு அதிர்ச்சியளித்தார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டுக்கான ஆட்டத்தில் இரு வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தியதால் ஆட்டம் சூடுப்பிடித்தது. இறுதில் வாவ்ரிங்கா 7-6 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றி பிராஸ்சிஸ்க்கு அதிர்ச்சியளித்தார்.
மொத்தம் 2 மணிநேரம், 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சுவிச்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா 6-3, 6-7, 7-6 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோவை வீழ்த்தி, மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: துபாய் சாம்பியன்ஷிப்: இரண்டாம் சுற்றில் ஜோகோவிச்!