ETV Bharat / sports

போட்டி நடுவரை தாக்கியதால் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிச்! - யூ.எஸ்.ஓபன் 2020

நியூயார்க்: யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்று ஆட்டத்தின்போது உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் எதிர்பாராதவிதமாக போட்டி நடுவரைத் தாக்கியதன் விளைவாக, அவர் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Watch: Title favourite Djokovic defaulted from US Open after striking line judge with ball

author img

By

Published : Sep 7, 2020, 12:20 PM IST

யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கிவருகிறது. இதில் இன்று (செப்.07) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவாக் ஜோகோவிச், ஸ்பெயினின் பப்லோ கரேனோ புஸ்டா (Pablo Carreño Busta) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இப்போட்டியின் முதல் செட்டை கரேனோ புஸ்டா கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார். இதனால் ஆவேசமடைந்த ஜோகோவிச் தனது கையிலிருந்த பந்தை கோபத்துடன் அடித்தார். அப்போது அந்தப் பந்து, போட்டியின் பெண் பட்டை நடுவரின் கழுத்துப்பகுதியில் பலமாகத் தாக்கியுள்ளது.

போட்டி நடுவரைத் தாக்கியதால் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிச்

இதில் அந்த நடுவர் மைதானத்தின் நடுவே வலிதாங்க முடியாமல் சுருண்டுவிழுந்தார். இதனைத்தொடர்ந்து களத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட காரணத்தால் ஜோகோவிச்சை தொடரிலிருந்து வெளியேற்றுவதாகப் போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

இதன்மூலம் யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ஜோகோவிச் வெளியேற்றப்பட்டு, பப்லோ கரேனோ புஸ்டா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

  • This whole situation has left me really sad and empty. I checked on the lines person and the tournament told me that thank God she is feeling ok. I‘m extremely sorry to have caused her such stress. So unintended. So… https://t.co/UL4hWEirWL

    — Novak Djokovic (@DjokerNole) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இத்தொடர் தொடங்குவதற்கு முன்பிருந்தே செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் எனப் பலரும் கருத்து தெரிவித்துவந்தனர். ஆனால் ஜோகோவிச்சின் இந்த ஒரு செயலால் அந்த எண்ணம் தவிடுபொடியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:யூ.எஸ்.ஓபன்: கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய போபண்ணா இணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.