ETV Bharat / sports

வியன்னா ஓபன்: முதல் சுற்றில் அசத்திய ஜோகோவிச், தீம்! - ஆஸ்திரியா தலைநகர்

ஆஸ்திரியாவில் நடைபெற்றுவரும் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களான நோவாக் ஜோகோவிச், டோமினிக் தீம் ஆகியோர் வெற்றிபெற்று அசத்தியுள்ளனர்.

Vienna Open: Top seeds Djokovic and Thiem made to work hard, Wawrinka bows out

author img

By

Published : Oct 28, 2020, 3:59 PM IST

டென்னிஸ் விளையாட்டின் மிகப் பிரபலமான உள்ளரங்குத் தொடரான வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெற்றுவருகிறது.

ஆடவருக்கான இத்தொடரின் முதல் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், சக நாட்டவரான பிலிப் க்ராஜினோவிச்சை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் க்ராஜினோவிச்சை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் சுற்றில் அசத்திய ஜோகோவிச், தீம்

நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டோமினிக் தீம், உக்ரைன் வீரரான விட்டலி சச்சோவை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தனது திறனை வெளிப்படுத்திய தீம் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் சச்சோவை வீழ்த்தி, வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க: பிபிஎல் தொடரிலிருந்து ஏபிடி விலகல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.