வரலாற்றுச் சிறப்புமிக்க யூ.எஸ். ஒபன் (US Open) டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்றுவருகின்றது. இதன் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தற்போது முதல் சுற்றில் போட்டியிடும் நட்சத்திர வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் தொடங்கும் யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள், பெண்கள் பிரிவில் விளையாடவுள்ள நட்சத்திர வீரர்கள் பட்டியல்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு:
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற டேனில் மெட்வதேவ், இந்தியாவின் குன்னேஸ்வரனை எதிர்கொள்கிறார்.
- மற்றொரு போட்டியில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் ரொபெர்டோவை எதிர்கொள்ளவிருக்கிறார்.
- உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை எதிர்கொள்ளவிருக்கிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு:
- உலகின் நட்சத்திர வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை எதிர்கொள்ளவிருக்கிறார். இவர்கள் இருவரும் முதல் முறையாக யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகின் முன்னணி வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, ஜப்பானின் ஸரினா டியாஸை எதிர்கொள்ளவிருக்கிறார்.
- ஜப்பானின் நட்சத்திர வீராங்கனை நவோமி ஒசாகா, ரஷ்யாவின் அண்ணா பிளிங்கோவாவை எதிர்கொள்ளவிருக்கிறார்.