ViennaOpen: வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் டியாகோ 6-3 என்ற கணக்கில் தீமிடமிருந்து கைப்பற்றினார். அதன்பின் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீம், இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி டியாகோவிற்கு அதிர்ச்சியளித்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் டொமினிக் தீம் மீண்டும் தனது திறமையைக் காட்டினார். இதனால் தீம் முன்றாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
-
WHAT a wonderful moment in Vienna.
— ATP Tour (@atptour) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The match point for @ThiemDomi who has secured his first title at the @ErsteBankOpen 🏆
🎥:@TennisTV pic.twitter.com/frvPvvCXDd
">WHAT a wonderful moment in Vienna.
— ATP Tour (@atptour) October 27, 2019
The match point for @ThiemDomi who has secured his first title at the @ErsteBankOpen 🏆
🎥:@TennisTV pic.twitter.com/frvPvvCXDdWHAT a wonderful moment in Vienna.
— ATP Tour (@atptour) October 27, 2019
The match point for @ThiemDomi who has secured his first title at the @ErsteBankOpen 🏆
🎥:@TennisTV pic.twitter.com/frvPvvCXDd
இதன் மூலம் டொமினிக் தீம் 3-6, 6-4, 6-3 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை வீழ்த்தி வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். அதுமட்டுமில்லாமல் டோமினிக் தீமிற்கு இது முதலாவது வியன்னா ஓபன் டென்னிஸ் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பும்ராவை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய கேப்டன்!