ETV Bharat / sports

சானியா கம்பேக், பயஸ் ஓய்வு, விம்பிள்டன் ரத்து: 2020ஆம் ஆண்டின் டென்னிஸ் நிகழ்வுகள் ஓர் பார்வை! - விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இரண்டாண்டுகளுக்கு பின் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் கம்பேக் கொடுத்தது முதல், பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றதுவரை, இந்த ஆண்டில் நிகழ்ந்த சில முக்கியமான டென்னிஸ் நிகழ்வுகள்.

TENNIS YEAR END 2020
TENNIS YEAR END 2020
author img

By

Published : Dec 29, 2020, 3:12 PM IST

2020ஆம் ஆண்டின் டென்னிஸ் நிகழ்வுகள் ஓர் பார்வை

ஹோபார்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ்

ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் மகளிருக்கான ஹோபார்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இத்தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா & உக்ரைன் நாட்டை சேர்ந்த நடியா கிச்னோக் இணை - சீனாவின் ஷாய் பெங் & ஷாய் செங் இணையை எதிர்கொண்டது.

சானியா மிர்சா கம்பேக்
சானியா மிர்சா கம்பேக்

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா மிர்சா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஷாய் பெங் - ஷாய் செங் இணையை வீழ்த்தி ஹோபார்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. மேலும் 33 வயதான சானியா மிர்சா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பங்கேற்ற முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று கம்பேக் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியன் ஓபன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியன் ஓபன் கோப்பையுடன் நோவாக் ஜோகோவிச்

இதன்மூலம் எட்டாவது முறையாக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நோவாக் ஜோகோவிச் சாதனை படைத்தார்.

லியாண்டர் பயஸ் ஓய்வு

கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைபெற்ற பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரின்போது இந்தியாவின் இந்திய டென்னிஸ் அடையாளமாக திகழ்ந்த லியாண்டர் பயஸ் அனைத்து வகையான டென்னிஸ் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

லியாண்டர் பயஸ்
லியாண்டர் பயஸ்

மேலும் அத்தொடரில் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் பயஸ்- மேத்யூ எப்டன் இணை 0-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் பூரவ் ராஜா & ராம்குமார் இணையிடம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

மெக்சிகன் ஓபன்

மெக்சிகோ நாட்டின் அகாபுல்கோ நகரில் மார்ச் மாதம் மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இத்தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் நட்சத்திர வீரரான ரஃபேல் நடால், அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்.

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்
டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், நடால் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தனது மூன்றாவது மெக்சிகன் ஓபன் பட்டத்தை வென்றார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரிய தொடராக கருதப்படுவது விம்பிள்டன் தொடராகும். கிட்டத்தட்ட டென்னிஸ் போட்டிகளில் இது உலகக்கோப்பை தொடராக பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான விம்பிள்டன் தொடர் ஜூன் 29 முதல் ஜூலை 12ஆம் தேதிவரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்
விம்பிள்டன் டென்னிஸ் தொடர்

ஆனால், இங்கிலாந்தில் தொடர்ந்த கரோனா அச்சுறுத்தலால் விம்பிள்டன் டென்னிஸ் தொடரை ரத்து செய்வதாக சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு முதன்முறையாக நடப்பாண்டிற்கான விம்பிள்டன் தொடர் கைவிடப்பட்டுள்ளது.

ஃபெட் ஹார்ட் கோப்பை

மகளிருக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் ஃபெட் கோப்பைப் போட்டியில் சிறப்பாக ஆடியதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஃபெட் ஹார்ட் கோப்பை வழங்கப்படும். 2009ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதை இதுவரை இந்திய வீராங்கனைகள் யாரும் பெற்றதில்லை.

சானியா மிர்ஸா
சானியா மிர்ஸா

இந்த ஆண்டு ஆசியா மற்றும் ஓசேனியாவிலிருந்து ஃபெட் கோப்பை ஹார்ட் விருதுக்காக இந்தியாவின் சானியா மிர்சாவும், இந்தோனேசியாவின் 16 வயதான பிரிஸ்கா மேடலின் நுக்ரொகொவும் பரிந்துரைக்கப்பட்டனர்.

மே ஒன்றாம் தேதியிலிருந்து நடத்தப்பட்ட இணையதள வாக்கெடுப்பில் 16 ஆயிரத்து 985 வாக்குகள் பெற்று சானியா மிர்சா இந்த விருதை வென்றார். இதன் மூலம் இந்தியா சார்பில் ஃபெட் கோப்பை ஹார்ட் விருதை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

நோவாக் ஜோகோவிச்

கரோனா தொற்றிலிருந்து மீண்ட ஜோகோவிச்
கரோனா தொற்றிலிருந்து மீண்ட ஜோகோவிச்

உலகின் முன்னணி டென்னிஸ் வீரராக திகழும் நோவாக் ஜோகோவிச், ஜூலை மாதம் நடைபெற்ற ஆட்ரியா தொடரின்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை சிகிச்சை முடிந்த ஜோகோவிச், பூரண குணமடைந்து மீண்டும் தனது பயிற்சிக்கு திரும்பினார்.

யு.எஸ். ஓபன்

செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டொமினிக் தீம் 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். மேலும் டொமினிக் தீம் வெல்லும் முதல் யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டமாகவும் இது அமைந்தது.

நவோமி ஒசாகா - டோமினிக் தீம்
நவோமி ஒசாகா - டோமினிக் தீம்

யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இது நவோமி ஒசாகா வெல்லும் இரண்டாவது யு.எஸ் ஓபன் சாம்பியன் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிரெஞ்ச் ஓபன்

அக்டோபர் மாதம் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், உலகின் முன்னணி வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை எதிர்கொண்டார்.

ரஃபேல் நடால்
ரஃபேல் நடால்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் ரஃபேல் நடால் 6-0, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 13ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ரஃபேல் நடால் பிரெஞ்ச் ஓபன் தொடரில், தனது 100ஆவது வெற்றியையும் பதிவு செய்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈகா ஸ்வியாடெக்
ஈகா ஸ்வியாடெக்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்று ஆட்டத்தில் போலாந்தின் ஈகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் சோஃபியா கெனினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் ஈகா ஸ்வியாடெக் போலாந்து சார்பில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்

நவம்பர் மாதம் நடைபெற்ற பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வை எதிர்கொண்டார்.

பாரிஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற டேனில் மெத்வதேவ்

பரபரப்பாக நடைபெற்ற இந்த அட்டத்தின் முடிவில் டேனில் மெத்வதேவ் 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இதையும் படிங்க:ரொனால்டினோ கைது முதல் மாரடோனா மறைவு வரை...2020ஆம் ஆண்டின் கால்பந்தாட்ட நிகழ்வுகள் ஓர் பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.