ETV Bharat / sports

களம் திரும்பும் சானியா மிர்சா! - வைரல் வீடியோ! - viral video

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா குழந்தைக்கு தாயான நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் தான் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Sania
author img

By

Published : Mar 11, 2019, 1:25 PM IST

இந்திய நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா, டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளை புரிந்து உள்ளார். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010 ஆம் ஆண்டு மணமுடித்தார். அதன்பின்பும், அவர் இந்தியாவிற்காக பல போட்டிகளில் களம் இறங்கி வந்தார்.

சானியா கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சீன ஓபன் தொடரில், கலப்பு இரட்டையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை பெங் சுவாய் உடன் களமிறங்கி தோல்வியுற்றார். அதைத் தொடர்ந்து மூட்டு காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், அவரால் பங்கேற்க முடியாமல் போனது.

இந்நிலையில், கடந்த 2018 ஏப்ரல் மாதம் தான் கருவுற்று இருப்பதாக அறிவித்தார். அதன்பின்னர் அக்டோபர் மாதம் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இஷான் என்ற அந்த குழந்தையின் படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியது.

சானியா குழந்தை பெற்றெடுத்து 5 மாதங்கள் ஆன நிலையில், தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் டிராக் உடையில் மீண்டும் டென்னிஸ் பயிற்சி மேற்கொள்வது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். இதன்மூலம் தனது பிட்னஸை உலகுக்கு அவர் அறிவித்துள்ளார்.

வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக சானியா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்த சானியாவின் ரசிகர்கள், மீண்டும் அவரை எப்போது களத்தில் காணலாம் என்ற ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Intro:Body:

ram sports

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.