2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் இன்று மெல்போர்னில் தொடங்கியது. இதன் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்று வரும் நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் 39 வயதாகும் அனுபவ வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸை எதிர்த்து 15 வயது வீராங்கனை கோகோ காஃப் விளையாட இருந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இன்று தொடங்கிய ஆட்டத்தில் முதல் சுற்றில் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் இரண்டு பாய்ன்ட்களை கோகோ கைப்பற்ற, பதிலடியாக வீனஸ் வில்லியம்ஸ் முதல் பாய்ன்ட்டைப் பெற்றார். ஒரு கட்டத்தில் இந்த ஆட்டம் 3-1 என கோகோ பக்கம் செல்ல, ஆட்டம் பரபரப்பானது. பின்னர் ஆட்டம் 6-6 என நிற்க , டை ப்ரேக்கர் வரை சென்றது. டை ப்ரேக்கரில் கோகோ காஃப் 7-5 எனக் கைப்பற்றினார். இதனால் கோகோ முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றி அசத்தினார்.
-
Dazzling Down Under Debut!
— #AusOpen (@AustralianOpen) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
In her first appearance in the #AusOpen main draw, @cocogauff collects her second win in as many tries against Venus Williams 7-6(5) 6-3.#AO2020 pic.twitter.com/aq8fm2d0IE
">Dazzling Down Under Debut!
— #AusOpen (@AustralianOpen) January 20, 2020
In her first appearance in the #AusOpen main draw, @cocogauff collects her second win in as many tries against Venus Williams 7-6(5) 6-3.#AO2020 pic.twitter.com/aq8fm2d0IEDazzling Down Under Debut!
— #AusOpen (@AustralianOpen) January 20, 2020
In her first appearance in the #AusOpen main draw, @cocogauff collects her second win in as many tries against Venus Williams 7-6(5) 6-3.#AO2020 pic.twitter.com/aq8fm2d0IE
முதல் செட் ஆட்டம் பரபரப்பாகச் செல்ல, அதற்கு எதிர்மாறாக இரண்டாவது செட் ஆட்டத்தில் 6-3 என கோகோ காஃப் கைப்பற்றி அசத்தினார்.
பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அனுபவ வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸை, 15 வயது மட்டுமே நிரம்பிய கோகோ காஃப் வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: டென்னிஸில் 15 வயதில் வரலாறு படைத்த ''கோகோ காஃப்''!