ETV Bharat / sports

நியூயார்க் ஓபன் தொடரிலிருந்து இந்திய ஜோடி வெளியேற்றம்!

நியூயார்க்: ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றிலிருந்து இந்தியாவின் திவிஜ் சரண் ஜோடி வெளியேறியது.

Sharan-Sitak bow out of New York Open
Sharan-Sitak bow out of New York Open
author img

By

Published : Feb 13, 2020, 8:27 PM IST

2020ஆம் ஆண்டுக்கான நியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடர், நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண், நியூசிலாந்தின் அர்தேம் சிதாக் பங்கேற்றிருந்தனர். இந்த ஜோடி முதல் சுற்றுப்போட்டியில் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜெக், குரோஷியாவின் ஃபிரான்கோ குவோர் ஜோடியை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றுப்போட்டியில் திவிஜ் சரண் - அர்தேம் சிதாக் இணை, அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன் - ரைலி ஒபேல்கா இணையுடன் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் திவிஜ் சரண் இணை 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிங்க: இந்தியில்தான் பேச வேண்டும் - கட்டளையிட்ட குஜராத் வர்ணனையாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.