ஜார்ஜ் ப்ளாய்ட் உயிரிழப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்ற ஆண்டு சம உரிமை பற்றி நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கூறிய கருத்து மக்களிடையே சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
2019, ஜூலை மாதத்தில் முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் பில்லி ஜீன், செரீனா டென்னிஸில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது. அதை விடுத்து நட்சத்திரங்களைப் போல் சம உரிமை பற்றி பேசுவது வீணானது என்றார்.
இதற்கு பதிலளித்த செரீனா, ''சம உரிமைக்கான எனது போராட்டம் என்றுமே நிற்காது. அது என் வாழ்வின் இறுதி நாள் வரை தொடரும்'' என்றார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.