ஏடிபி பியூனோஸ் ஏர்ஸ் ஆடவர் டென்னிஸ் தொடர் (அர்ஜென்டினா ஓபன்) பிப்.8ஆம் தொடங்கி நடந்துவருகிறது. இதன் இரண்டாவது சுற்றில் அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்த்து சகநாட்டு வீரரான ஃபெடரிக்கோ டெல்போனிஸ் ஆடினார். இதன் முதல் செட் ஆட்டத்தில் 6-3 என்ற கணக்கில் டியாகோ கைப்பற்ற, இரண்டாவது செட்டை டெல்போனிஸ் 4-6 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மூன்றாவது செட் ஆட்டமான டிசைடருக்கு ஆட்டம் நகர்ந்தது. அதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டியாகோ 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டியாகோ அர்ஜெண்டினாவின் பியூனோஸ் ஏர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். நாளை நடக்கவுள்ள காலிறுதிப் போட்டியில் டியாகோ உருகுவேயின் பாப்லோவை எதிர்த்து ஆடவுள்ளார்.
இதையும் படிங்க: எடையைக் குறைத்தது எப்படி... ரகசியம் சொல்லும் சானியா மிர்சா!