கரோனா வைரஸால் உலக நாடுகளின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. குறிப்பாக இந்திய நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீட்கும் விதமாக விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்திய தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முன்வந்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் #SupportSmallBySania என்ற ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி இந்திய தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார். இந்த ஹேஷ்டேக் மூலம் தனக்கு பிடித்த 20 நிறுவனங்களை தேர்வு செய்யவுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், நமக்குத் தெரிந்த வாழ்க்கை தற்போது மாறிவிட்டது. இதனை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். #SupportSmallBySania என்பது நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கும் எனது தாழ்மையான முயற்சியாகும். இது நமது மக்களுக்கு ஆதரவளிக்கும் சிறிய வழியாகும்"என்றார்.