ETV Bharat / sports

டேவிஸ் கோப்பை: நடால் அதிரடியால் அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்!

author img

By

Published : Nov 23, 2019, 1:14 PM IST

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

davis cup tennis

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் நன்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால், பப்லோ கரெனோ,மார்செல் கிரானோலர்ஸ் அடங்கிய அணி, அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன்,கைடோ பெல்லா, லியோனார்டோ மேயர் அடங்கிய அணியை எதிர்கொண்டது.

முதல் போட்டியில் ஸ்பெயினின் நாடால், அர்ஜெண்டினாவின் டியாகோவை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ரஃபேல் நடால் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டியாகோவை வீழ்த்தி, ஸ்பெயின் அணிக்கு முதல் வெற்றியைப் பெற்று தந்தார்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயினின் கரெனோ, அர்ஜெண்டினாவின் கைடோ பெல்லாவை எதிர்த்து மோதினார். இந்த போட்டியில் அர்ஜெண்டினாவின் பெல்லா 6-7, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் கரெனோவை வீழ்த்தி, அர்ஜெண்டினா அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்து ஆட்டத்தை 1-1 என சமநிலைப் படுத்தினார்.

First blood to Argentina...@guido_pella fights an extraordinary comeback to top Carreno Busta 6-7(3) 7-6(4) 6-1 for the all important first win...

🇦🇷1️⃣🆚0️⃣🇪🇸#ARGESP #DavisCupMadridFinals #byRakuten pic.twitter.com/hXCVQN4sh3

— Davis Cup by Rakuten Madrid Finals (@DavisCupFinals) November 22, 2019 ">

அதன்பின் நடைபெற்ற ஆட்டதின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் கிரானோலர்ஸ், அர்ஜெண்டினாவின் மேயரை எதிர்கொண்டார். வெற்றியைத் தீர்மாணிக்கும் போட்டி என்பதால் இரு அணி வீரர்களும் தங்களது முழு திறமையையும் காட்டி போட்டியிட்டனர்.

ஸ்பெயின் நாட்டின் கிரானோலர்ஸ் 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் மேயரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் ஸ்பெயின் அணி டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இதையும் படிங்க: இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் நன்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால், பப்லோ கரெனோ,மார்செல் கிரானோலர்ஸ் அடங்கிய அணி, அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன்,கைடோ பெல்லா, லியோனார்டோ மேயர் அடங்கிய அணியை எதிர்கொண்டது.

முதல் போட்டியில் ஸ்பெயினின் நாடால், அர்ஜெண்டினாவின் டியாகோவை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ரஃபேல் நடால் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டியாகோவை வீழ்த்தி, ஸ்பெயின் அணிக்கு முதல் வெற்றியைப் பெற்று தந்தார்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயினின் கரெனோ, அர்ஜெண்டினாவின் கைடோ பெல்லாவை எதிர்த்து மோதினார். இந்த போட்டியில் அர்ஜெண்டினாவின் பெல்லா 6-7, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் கரெனோவை வீழ்த்தி, அர்ஜெண்டினா அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்து ஆட்டத்தை 1-1 என சமநிலைப் படுத்தினார்.

அதன்பின் நடைபெற்ற ஆட்டதின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் கிரானோலர்ஸ், அர்ஜெண்டினாவின் மேயரை எதிர்கொண்டார். வெற்றியைத் தீர்மாணிக்கும் போட்டி என்பதால் இரு அணி வீரர்களும் தங்களது முழு திறமையையும் காட்டி போட்டியிட்டனர்.

ஸ்பெயின் நாட்டின் கிரானோலர்ஸ் 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் மேயரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் ஸ்பெயின் அணி டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இதையும் படிங்க: இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்!

Intro:Body:

davis cup tennis - nadal 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.