லண்டனில் ஆடவருக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆண்டர் அகாஸ் குரூப்பில் இடம்பெற்றுள்ள உலகின் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால் கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில், சிட்சிபாஸ் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி நடாலுக்கு அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நடால் இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியில் சமநிலையை ஏற்படுத்தினார்.
அதன்பின் நடைபெற்ற வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய நடால் 7-5 என்ற கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தினார்.
-
ANOTHER DAY, ANOTHER COMEBACK. @RafaelNadal recovers from a set down to defeat @StefTsitsipas and stay alive in the #NittoATPFinals 🔥
— ATP Tour (@atptour) November 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
🎥: @TennisTV pic.twitter.com/RQGS5lu6gP
">ANOTHER DAY, ANOTHER COMEBACK. @RafaelNadal recovers from a set down to defeat @StefTsitsipas and stay alive in the #NittoATPFinals 🔥
— ATP Tour (@atptour) November 15, 2019
🎥: @TennisTV pic.twitter.com/RQGS5lu6gPANOTHER DAY, ANOTHER COMEBACK. @RafaelNadal recovers from a set down to defeat @StefTsitsipas and stay alive in the #NittoATPFinals 🔥
— ATP Tour (@atptour) November 15, 2019
🎥: @TennisTV pic.twitter.com/RQGS5lu6gP
இதன் மூலம் உலகின் நம்பர் ஒன் வீரரான ரபேல் நடால் 6-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தினார்.
இதையும் படிங்க: விம்பிள்டன் தோல்விக்கு பழிதீர்த்த ஃபெடரர்!