ஜூஹாய் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பிரான்சு நாட்டின் அட்ரியன் மன்னாரினோ ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ் வினோலாஸை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்தப் போட்டியில் அட்ரியன் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஆல்பர்ட்டை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பிரான்சு நாட்டின் அட்ரியன் மன்னாரினோ ஜூஹாய் சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ராபர்டோ பாடிஸ்டா அகுட் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ்-டி-மினோரை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் டி-மினோர் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பாடிஸ்டா அகுட்டிற்கு அதிர்ச்சியளித்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் அலக்ஸ்-டி-மினோர் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றார்.
-
Championship match between 👇 Who will win?@alexdeminaur🆚@AdrianMannarino
— Zhuhai Championships (@ZhuhaiChampions) September 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
💥💥
🏆🏆🏆#ZC19 @ATP_Tour pic.twitter.com/yBttWpHt7G
">Championship match between 👇 Who will win?@alexdeminaur🆚@AdrianMannarino
— Zhuhai Championships (@ZhuhaiChampions) September 29, 2019
💥💥
🏆🏆🏆#ZC19 @ATP_Tour pic.twitter.com/yBttWpHt7GChampionship match between 👇 Who will win?@alexdeminaur🆚@AdrianMannarino
— Zhuhai Championships (@ZhuhaiChampions) September 29, 2019
💥💥
🏆🏆🏆#ZC19 @ATP_Tour pic.twitter.com/yBttWpHt7G
இன்று நடைபெறவுள்ள ஜூஹாய் சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், பிரான்சின் ஆட்ரியன் மன்னாரினோ ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் -டி-மினோரை எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க: