ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் சுமார் 19.8 மில்லியன் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்தனர். இதனால் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேறு இடங்களுக்கு மாற்றமடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான உயிரினங்கள், விலங்குகள், பறவைகள் உயிரிழந்துள்ளன. இது உலக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவுவது ஒவ்வொரு வருடமும் நிகழ்வது தான். ஆனால் இந்த ஆண்டு காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்டுத்தீயை அணைக்க, தீயணைப்பு வீரர்கள், ராணுவம், தன்னார்வலர்கள் என பெரும் படையே போராடி வருகிறது. இதனால் காற்றில் ஏற்பட்டுள்ள மாசு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக பல்வேறு நாடுகளிலும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
-
The month of January in Australia has been my 🏠 for the past 15 years. Watching the fires destroy the lands, it’s beautiful families and communities of animals is deeply💔. I would like to begin my donation at 25K. @DjokerNole, would you match my donation?🙏🏻 #letsallcometogether
— Maria Sharapova (@MariaSharapova) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The month of January in Australia has been my 🏠 for the past 15 years. Watching the fires destroy the lands, it’s beautiful families and communities of animals is deeply💔. I would like to begin my donation at 25K. @DjokerNole, would you match my donation?🙏🏻 #letsallcometogether
— Maria Sharapova (@MariaSharapova) January 5, 2020The month of January in Australia has been my 🏠 for the past 15 years. Watching the fires destroy the lands, it’s beautiful families and communities of animals is deeply💔. I would like to begin my donation at 25K. @DjokerNole, would you match my donation?🙏🏻 #letsallcometogether
— Maria Sharapova (@MariaSharapova) January 5, 2020
இந்நிலையில், இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஆஸ்திரேலியா ஓபன் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் பல்வேறு வெளிநாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்ஜியோஸ் நிவாரண நிதி வழங்கக்கோரி கோரிக்கை விடுத்திருந்தார். இதனை மகளிர் வீராங்கனைகளான ஆஷ்லி பார்ட்டி, சிமோனா ஹெலப் ஆகியோர் பாராட்டி அனைவரும் நிவாரணம் அளிக்க முன்வருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷெரபோவா, 25 ஆயிரம் டாலர் நிவாரண நிதியை வழங்கினார். அதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். அதில், கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதமும் ஆஸ்திரேலியா எனக்கு வீடு போல் உள்ளது. இப்போது அந்த வீட்டினுள் ஏற்பட்டுள்ள தீயால் நிலம், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என யாவும் அழிந்துவருவதைப் பார்க்க முடியவில்லை. என்னால் முடிந்த நிவாரண நிதியை வழங்குகிறேன் எனப் பதிவிட்டதோடு, டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை இணைத்து நிவாரணம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
-
Yes, @MariaSharapova I would like to match your $25k donation to double the aid sent to these communities. We stand by you, #Australia. 🙏🏼 https://t.co/wiUZHzg9cz
— Novak Djokovic (@DjokerNole) January 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Yes, @MariaSharapova I would like to match your $25k donation to double the aid sent to these communities. We stand by you, #Australia. 🙏🏼 https://t.co/wiUZHzg9cz
— Novak Djokovic (@DjokerNole) January 6, 2020Yes, @MariaSharapova I would like to match your $25k donation to double the aid sent to these communities. We stand by you, #Australia. 🙏🏼 https://t.co/wiUZHzg9cz
— Novak Djokovic (@DjokerNole) January 6, 2020
இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்று, ஜோகோவிச்சும் 25 ஆயிரம் டாலர்கள் நிவாரண நிதியளிக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
இது பல்வேறு நாடுகளில் வசிக்கும் பொதுமக்களிடமும், பிரபல விளையாட்டு வீரர்களிடமும் நிவாரணம் அளிக்க முன்வரவேண்டும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் ஆடிவரும் கிரிக்கெட் போட்டியில் காட்டுத் தீயைக் குறிக்கும் விதமாக கையில் பேண்ட் அணிந்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்த ஆஸி.!