2019ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஆடவர் காலிறுதுப் போட்டியில் ஸ்விஸ் நட்சத்திர வீரர் ஃபெடரர் நிஹிகோரியை வீழ்த்தியும், ஸ்பெயின் வீரர் நடால் சாம் குர்ரேவை வீழ்த்தியும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளனர்.
இந்நிலையில் அரையிறுதி போட்டியில் நட்சத்திர வீரர்களான ஃபெடரர் - நடால் மோதவுள்ளனர்.
இதற்கு முன், பிரெஞ்சு ஓபன் தொடரின் அரையிறுதியில் களிமண் தரை மன்னனான நடால், தனது கோட்டையில் வைத்து ஃபெடரரை வீழ்த்தியதற்கு, புல்தரையின் அரசன் என அழைக்கப்படும் ஃபெடரர் பழிதீர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விம்பிள்டன் தொடரை 8 முறை வென்று 9ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதிக்கக் காத்திருக்கும் ஃபெடரரும், களிமண் மட்டுமல்ல புல்தரையிலும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என நிரூபிக்கக் காத்திருக்கும் நடாலும் மோதவுள்ளது டென்னிஸ் ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.