2019ஆம் ஆண்டுக்கான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் நான்காவது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலை எதிர்த்து கனடா வீரர் ஃபெலிக்ஸ் ஆகர் மோதினார்.
'களிமண் ஆடுகளத்தின் மன்னன்' எனப் போற்றப்படும் நடால், இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இதில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஃபெலிக்ஸை வீழ்த்தி நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மான்டி கார்லோ, பார்சிலோனா உள்ளிட்ட தொடர்களில் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நடால், அதனையடுத்து இந்தத் தொடரில்தான் களமிறங்கியுள்ளார். மேலும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரை ஐந்து முறை வென்றுள்ள நடால், ஆறாவது முறையாக இந்த ஆண்டு வெல்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.