ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் உலகின் முன்னணி வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் குரோஷியாவின் போர்னா கோரிக்கை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்தப் போட்டியில் மெட்வதேவ் முதல் செட் கணக்கை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கோரிக்கிடமிருந்து கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மெட்வதேவ் இரண்டாவது செட்டையும் 6-1 என்ற கணக்கில் கோரிக்கை வீழ்த்தினார்.
-
Clinical from start to finish.
— ATP Tour (@ATP_Tour) September 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Another tremendous title winning performance from @DaniilMedwed 🏆
🎥: @TennisTV | @Formula_TX pic.twitter.com/KE1A0HY8no
">Clinical from start to finish.
— ATP Tour (@ATP_Tour) September 22, 2019
Another tremendous title winning performance from @DaniilMedwed 🏆
🎥: @TennisTV | @Formula_TX pic.twitter.com/KE1A0HY8noClinical from start to finish.
— ATP Tour (@ATP_Tour) September 22, 2019
Another tremendous title winning performance from @DaniilMedwed 🏆
🎥: @TennisTV | @Formula_TX pic.twitter.com/KE1A0HY8no
இதன்மூலம் டேனில் மெட்வதேவ் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் 6-3, 6-1 என்ற கணக்கில் குரோஷியாவின் போர்னா கோரிக்கை (Borna Coric) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய வீரர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல்முறை. இதற்குமுன் 2004ஆம் ஆண்டு அந்நாட்டைச் சேர்ந்த மைக்கல் யூனிஷ் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தரவரிசைப் பட்டியலில் கெத்துக் காட்டிய சுமித் நகல்