2019ஆம் ஆண்டுக்கான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் நடாலை எதிர்த்து, சுவிட்சர்லாந்த் வீரர் வாவ்ரிங்கா ஆடினார்.
இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் முதல் செட்டை 6-1 என எளிதாக வென்றார். பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் நடாலின் ஆக்ரோஷம் தொடர, அதற்கு தாக்கு பிடிக்க முடியாத வாவ்ரிங்கா 6-2 என இரண்டாவது செட்டைப் பறிகொடுத்து நடாலிடம் தோல்வியடைந்தார்.
இதனையடுத்து, நடால் ஆரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்த ஆண்டில் நடைபெற்ற டென்னிஸ் தொடர்களில், நடால் மூன்றாவது முறையாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் நடாலை எதிர்த்து கிரீஸ் வீரர் சிட்ஸிபஸ் ஆடவுள்ளார்.