2020ஆம் ஆண்டுக்கான மகாராஷ்ட்டிரா ஓபன் டென்னிஸ் தொடர் பிப்.1ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் ஜிஜி வெஸ்ஸலியை எதிர்த்து பெலாருசிய வீரர் ஜெராசிமோவ் ஆடினார்.
இந்த ஆட்டம் தொடங்கியது முதலே இரு வீரர்களும் சிறப்பாக ஆடினார். இதனால் முதல் செட் ஆட்டம் 6-6 என்ற நிலையில் டை ப்ரேக்கருக்கு சென்றது. டை ப்ரேக்கரில் 7-2 என்ற கணக்கில் ஜிரி வெல்ல, முதல் செட்டை ஜிரி வெஸ்ஸலி 7-6 (7-2) எனக் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் ஜெராசிமோவ் 5-7 என்ற கணக்கில் கைப்பற்ற, ஆட்டம் மூன்றாவது சுற்றுக்கு சென்றது.
டிசைடரில் தொடர்ந்து மூன்று புள்ளிகளை ஜிரி வெஸ்ஸலி கைப்பற்ற, ஜெராசிமோவால் பதிலளிக்க முடியவில்லை. இறுதியாக 6-3 என்ற கணக்கில் ஜிரி மகாராஷ்ட்டிரா ஓபன் தொடரை வென்றார்.
இந்த வெற்றிகுறித்து பேசுகையில், '' இந்தியாவிற்கு வந்து தொடரைக் கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. எனது ஆட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த வெற்றியை வருகிற அனைத்து தொடர்களிலும் தொடரவேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: இந்திய அணியின் வருங்கால நட்சத்திரங்கள்!