ETV Bharat / sports

டேவிஸ்கோப்பை வெற்றி இந்தியாவுக்கு முக்கியமானது : லியாண்டர் பயஸ்! - Rohit Rajpal

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பாகிஸ்தானை 4 -0 என வீழ்த்தி இந்தியா பெற்ற வெற்றி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என இந்திய வீரர் லியாண்டர் பயஸ் கூறியுள்ளார்.

it-was-an-important-victory-for-us-leander-paes-on-davis-cup-win-over-pak

author img

By

Published : Dec 2, 2019, 1:41 PM IST

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கண்டங்கள் ரீதியாக நடைபெற்றது. இதில், ஆசிய ஓசேனியா குரூப் 1 பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது. கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 4-0 என பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை உலகத் தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதையடுத்து நேற்றிரவு நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து செய்தியாளர்களுடன் பயஸ் பேசுகையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. எங்கள் கேப்டன் ரோஹித் ராஜ்பால் மிகவும் சிறப்பாக அணியை ஒருங்கிணைத்துள்ளார் என்றார்.

கேப்டன் ரோஹித் ராஜ்பால் பேசுகையில், வெற்றி எப்போதுமே தனித்துவமும் முக்கியத்துவமும் வாய்ந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற வெற்றி என்பதால் உணர்ச்சிகரமாக உள்ளது. லியாண்டர் பயஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.

இதையும் படிங்க: டேவிஸ் கோப்பை வெற்றியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் - சுமித் நாகல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.