ETV Bharat / sports

டேவிஸ் கோப்பை டென்னிஸ் பாகிஸ்தானில் கிடையாது - Davis Cup tennis

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் பாகிஸ்தானில் நடைபெறாது என்று சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

tennis
author img

By

Published : Nov 5, 2019, 9:38 AM IST

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) சார்பில் ஆடவர் டென்னிஸ் வீரர்களுக்கான டேவிஸ் கோப்பை தொடர் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 100 வருடத்திற்கும் மேல் பழமையான இந்தத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போட்டி வருகின்ற நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி பாகிஸ்தானுக்கு செல்ல சில இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

tennis
இந்திய டென்னிஸ் சங்கம்

இதனால் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுமாறு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பிடம் இந்திய டென்னிஸ் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தியது. இதனிடையே சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு இந்தியா - பாகிஸ்தான் டேவிஸ் கோப்பை போட்டி தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

அந்த அறிவிப்பில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் சுதந்திர பாதுகாப்பு ஆலோசகர்கள் அளித்த அறிவுரையின் அடிப்படையில் டேவிஸ் கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை பொதுவான ஒரு இடத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதற்கே ஐடிஎஃப் மற்றும் டேவிஸ் கோப்பை கமிட்டி முன்னுரிமை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டேவிஸ் கோப்பை விதிமுறைகளின்படி, தற்போது பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பிற்கு, போட்டியை நடத்தும் இடத்தை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இதனை அடுத்த ஐந்து வேலை நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் சலீம் சைஃபுல்லா கான், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் இந்த முடிவு விளையாட்டில் உள்ள அரசியல். இது துரதிர்ஷ்டவசமான ஒன்று என்றும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

முன்னதாக இந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்தது. ஆனால் அச்சமயத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிச் சட்டம் விலக்கப்பட்டதால், இந்தியா-பாகிஸ்தான் இடையோன உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாக இந்தியா கூறியதால் அப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

New Delhi, Nov 4 (IANS) The Davis Cup tie between India and Pakistan, which was scheduled to be played in Islamabad, will be shifted to a neutral venue, the International Tennis Federation (ITF) said in a statement on Monday.

It also said that the tie will be held on November 29 and 30.

"Following the review of the latest advice given by the ITF's independent security advisors, the Davis Cup Committee has taken the decision that the Davis Cup Asia/Oceania Group I tie between Pakistan and India on November 29-30 must be played at a neutral venue," the ITF said.

It further stated that as per the Davis Cup regulations, "the Pakistan Tennis Federation (PTF) has the choice to nominate a neutral venue and has five working days to confirm the proposed venue. The venue will be announced once the choice has been submitted or approved."

"The ITF and Davis Cup Committee's first priority has always been the safety of athletes, officials and spectators and the decision was made on this basis," it said.

The tie was earlier scheduled to be held on September 14-15 but was postponed to November after a security review by the ITF in August. The postponement had come in the wake of pleas from India to shift the tie to a neutral venue or postpone it given the heightened tensions between the two countries.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.