ETV Bharat / sports

கரோனா வைரஸ் பாதிப்பால் டேவிஸ் கோப்பைத் தொடர் ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான டேவிஸ் கோப்பைத் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

indias-davis-cup-tie-against-finland-postponed-to-2021-amid-covid-19-pandemic

author img

By

Published : Jun 27, 2020, 1:08 PM IST

உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீரர்களின் பாதுகாப்பு கருதி சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் பல்வேறு தொடர்களை ஒத்தி வைத்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் நடந்த ஆசிய - ஒசேனியா மண்டலங்களுக்கு உட்பட்ட நாடுகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. அதில் பாகிஸ்தானை வீழ்த்திய பின், 2020ஆம் ஆண்டுக்கான உலகத் தகுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது.

அதில், குரோஷிய அணியை எதிர்த்த இந்திய, 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் உலகப் பிரிவு 1 ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்கவிருந்தது. உலகத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்த அணிகளான இந்தியா - ஃபின்லாந்து அணிகள் செப்டம்பர் மாதத்தில் நடக்கவிருந்த உலகப் பிரிவு ஆட்டத்தில் மோதவிருந்தன.

டேவிஸ் கோப்பை ஆட்டம் ஒத்திவைப்பு
டேவிஸ் கோப்பை ஆட்டம் ஒத்திவைப்பு

ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகியுள்ளதால் டேவிஸ் கோப்பைத் தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா - ஃபின்லாந்து அணிகள் மோதும் ஆட்டம் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது செப்டம்பர் மாதங்களில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ''48 நாடுகள் பங்கேற்றுள்ள உலகப் பிரிவு 1 மற்றும் உலகப் பிரிவு 2 ஆகிய போட்டிகள் அனைத்தும் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் 2021ஆம் ஆண்டு மார்ச் அல்லது செப்டம்பர் மாதத்தில் நடக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜோகோவிச் பயிற்சியாளருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.