ETV Bharat / sports

பிரஞ்ச் ஓபன்: இறுதிச் சுற்றில் ஸ்வியாடெக் - கெனின்! - ஈகா ஸ்வியாடெக்

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஈகா ஸ்வியாடெக், சோஃபியா கெனின் ஆகியோர் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

French Open: Sofia Kenin will face unseeded Iga Swiatek in final

author img

By

Published : Oct 9, 2020, 5:51 PM IST

டென்னிஸ் விளையாட்டின் மிகப் பிரபலமான தொடரான பிரஞ்ச் ஓபன் தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது.

முதல் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை சோஃபியா கெனின், செக் குடியரசின் பெட்ரோ கொவிட்டோவை எதிர்கொண்டார். பரப்பான இந்த ஆட்டத்தில் சோஃபியா கெனின் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கொவிட்டோவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் போலாந்தின் ஈகா ஸ்வியாடெக், அர்ஜெண்டினாவின் நடியா பொடோரோஸ்காவை எதிர்த்து விளையாடினார்.

இப்போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் பொடோரோஸ்காவை வீழ்த்தி, பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இத்தொடரில் நாளை (அக்.10) நடைபெறும் இறுதிச்சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் சோஃபியா கெனின் - போலாந்தின் ஈகா ஸ்வியாடெக்கை எதிர்த்து விளையாட உள்ளார்.

இறுதிச் சுற்றில் ஸ்வியாடெக் - கெனின்

இதையும் படிங்க:தன்னுடைய கிரிக்கெட் ஹீரோக்கள் குறித்து மனம் திறந்த சச்சின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.