பரபரப்பாக நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று (அக். 08) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஸ்பெயினின் பப்லோ கரேனோ புஸ்டாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை கரேனோ புஸ்டா 6- 4 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார். பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கிய ஜோகோவிச் 6-2, 6-3, 6-4 என்ற கணக்கில் அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் நோவாக் ஜோகோவிச் 4-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பாப்லோ கரேனா புஸ்டாவை வீழ்த்தி பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு 10ஆவது முறையாக முன்னேறியுள்ளார்.
நாளை(அக்.09)நடைபெறவுள்ள அரையிறுதியில் ஜோகோவிச், கிரீஸ் நாட்டின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க:பிரஞ்சு ஓபன்: காலிறுதியில் மோதும் ஜோகோவிச் - கரேனோ புஸ்டா!