பரபரப்பாக நடைபெற்று வரும் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ்வை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிவந்த ஜோகோவிச் முதல் செட்டை 6- 4 என்ற கணக்கிலும், இரண்டு மற்றும் மூன்றாவது செட்டை 6- 3 என்ற கணக்கிலும் கைப்பற்றி கச்சனோவ்விற்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் மூலம் ஜோகோவிச் 6-4, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் கரேன் கச்சனோவ்வை வீழ்த்தி பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
நாளை நடைபெறும் காலிறுதிச்சுற்றில் ஜோகோவிச், ஸ்பெயினின் பப்லோ கரேனோ புஸ்டாவை (Pablo Carreño Busta) எதிர்கொள்ளவுள்ளார். முன்னதாக யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரில் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதினர். ஆனால் அந்தப் போட்டியில் ஜோகோவிச் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டதால் புஸ்டா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு!