டென்னிஸ் விளையாட்டின் மிகவும் பிரபலமான தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. தற்போது இத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி ரசிகர்களை பரபரப்பின் உச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளது.
இதில், நேற்று (அக். 09) நள்ளிரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், கிரீஸ் நாட்டின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், முதல் இரண்டு செட்களை 6-3, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட சிட்சிபாஸ், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7-5, 6-4 என்ற கணக்கில் அடுத்தடுத்த செட்டை கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு நெருக்கடியளித்தார்.
இதையடுத்து நடைபெற்ற இறுதி செட்டிற்கான ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட ஜோகோவிச் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி சிட்சிபாஸிற்கு அதிர்ச்சியளித்தார்.
இதன்மூலம் நோவாக் ஜோகோவிச் 6-3, 6-2, 5-7, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் கிரீஸின் சிட்சிபாஸை வீழ்த்தி, ஐந்தாவது முறையாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மேலும் பிரெஞ்ச் ஓபனில் நாளை நடைபெறவுள்ள ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் நோவாக் ஜோகோவிச் - ரஃபேல் நடாலை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்!