செர்பியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான நோகோவ் ஜோகோவிச் தலைசிறந்த டென்னிஸ் வீரராக திகழ்ந்துவருகிறார். இவர், கடந்த மாதம் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம், மீண்டும் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
இந்நிலையில், இவர் நேற்று தனது சொந்த ஊரான பெல்கிரேட்டில் தனது அறக்கட்டளை சார்பில் இணைந்து நடத்தப்படும் தொண்டு நிகழ்வுக்கு ஊக்குவிக்க வருகை தந்திருந்தார். அச்சமயத்தில், அங்குள்ள சிறுவர்கள் மூன்று பேர் இரவில் தெரு விளக்கு வெளிச்சத்தில் டென்னிஸ் விளையாடிவந்தனர். இதைப் பார்த்த ஜோகோவிச் அவர்களுடன் சேர்ந்து தெருவில் இரட்டையர் பிரிவில் டென்னிஸ் விளையாடியுள்ளார்.
-
You have to love this from @DjokerNole ❤
— ATP Tour (@atptour) February 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Playing tennis in the streets of Belgrade with some local fans 🙌pic.twitter.com/nf8sGooovZ
">You have to love this from @DjokerNole ❤
— ATP Tour (@atptour) February 18, 2020
Playing tennis in the streets of Belgrade with some local fans 🙌pic.twitter.com/nf8sGooovZYou have to love this from @DjokerNole ❤
— ATP Tour (@atptour) February 18, 2020
Playing tennis in the streets of Belgrade with some local fans 🙌pic.twitter.com/nf8sGooovZ
சிறுவர்களுடன் ஜாலியாக ஜோகோவிச் டென்னிஸ் விளையாடியதை பால்கனியிலிருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 32 வயதான இவர் இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனி 'நோவாக் நோவாக்' என்ற குரல்கள் அதிகமாக எழும்!