பாரீஸ் (பிரான்ஸ்): டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (ஜூன் 11) நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில், முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடால் ஆகியோர் மோதினர்.
முதலிரண்டு சுற்று
இரண்டு பெருங்கைகள் மோதியதால், ஏற்கெனவே எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இதையடுத்து, முதல் சுற்றில், நடால் 6-3 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற, இரண்டாம் சுற்றில் ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் வென்று சமன்செய்தார்.
அடுத்த சுற்றிலும் தனது ஆதிக்கத்தையேத் தொடர்ந்த ஜோகோவிச், 7-6 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றார். இந்தச் சுற்று மட்டும் சுமார் 93 நிமிடங்கள் நீடித்துள்ளது.
-
🔝 match#RolandGarros | @DjokerNole pic.twitter.com/K5pOngICmn
— Roland-Garros (@rolandgarros) June 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🔝 match#RolandGarros | @DjokerNole pic.twitter.com/K5pOngICmn
— Roland-Garros (@rolandgarros) June 11, 2021🔝 match#RolandGarros | @DjokerNole pic.twitter.com/K5pOngICmn
— Roland-Garros (@rolandgarros) June 11, 2021
பாரீஸில் இரவு 11 மணிவரை தான் பொதுமக்களுக்கு வெளியில் செல்ல அனுமதியுள்ளது. இதனால், போட்டியின் பாதியிலேயே வெளியேற வேண்டுமோ என ரசிகர்கள் பதறிக் கொண்டிருக்க, போட்டி முடியும்வரை ரசிகர்கள் இருக்கலாம் என்று அறிவிப்பு, அனல்பறந்த போட்டியில் மேற்கொண்டு சூட்டையேற்றியது.
-
Celebration beyond earned 🥳#RolandGarros | @DjokerNole pic.twitter.com/8sofzbEaXK
— Roland-Garros (@rolandgarros) June 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Celebration beyond earned 🥳#RolandGarros | @DjokerNole pic.twitter.com/8sofzbEaXK
— Roland-Garros (@rolandgarros) June 11, 2021Celebration beyond earned 🥳#RolandGarros | @DjokerNole pic.twitter.com/8sofzbEaXK
— Roland-Garros (@rolandgarros) June 11, 2021
வீழ்ந்தார் நடால்
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நான்காம் சுற்றில், ஜோகோவிச் நடாலை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டார். 6-2 என்ற செட் கணக்கில் ஜோகேவிச் அந்தச் சுற்றை வெல்ல, 13 முறை பிரஞ்சு ஓபன் சாம்பியன் ரபேல் நடாலை வீழ்த்தி ஆறாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஜோகோவிச்.
-
What an effort, @RafaelNadal 👏#RolandGarros pic.twitter.com/Usx6WVxRm6
— Roland-Garros (@rolandgarros) June 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What an effort, @RafaelNadal 👏#RolandGarros pic.twitter.com/Usx6WVxRm6
— Roland-Garros (@rolandgarros) June 11, 2021What an effort, @RafaelNadal 👏#RolandGarros pic.twitter.com/Usx6WVxRm6
— Roland-Garros (@rolandgarros) June 11, 2021
இந்தப் போட்டி ஏறத்தாழ 4 மணிநேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை (ஜூன் 13) நடைபெறும் இறுதிப்போட்டியில் கிரீஸ் நாட்டு வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் உடன் ஜோகேவிச் மோதவுள்ளார்.
இதையும் படிங்க: தவான் கேப்டன், நடராஜன் அவுட்: இந்திய அணி அறிவிப்பு