ETV Bharat / sports

அபுதாபி ஓபன்: சீசனின் முதல் வெற்றியைப் பெற்ற கசட்கினா!

author img

By

Published : Jan 6, 2021, 9:43 PM IST

அபுதாபி: இந்த ஆண்டின் முதல் டென்னிஸ் தொடரான அபுதாபி ஓபனில் இன்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் ரஷ்யாவின் டாரியா கசட்கினா வெற்றிபெற்றார்.

Daria Kasatkina wins 1st women's tennis match of new season

2021ஆம் ஆண்டில் மகளிருக்கான முதல் டென்னிஸ் தொடராக அபுதாபி ஓபன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் டாரியா கசட்கினா (Daria Kasatkina) - சீனாவின் வாங் கியாங் (Wang Qiang) மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ரஷ்யாவின் டாரியா கசட்கினா முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதற்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் இரண்டாவது செட்டை வாங் கியாங் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதனால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற பரபரப்பு நிலவியது. இறுதியில் மூன்றாவது செட்டை கசட்கினா 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி வாங் கியாங்கிற்கு அதிர்ச்சியளித்தார்.

இதன்மூலம் ரஷ்யாவின் டாரியா கசட்கினா 6-1, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் கியாங்கை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.