கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இது உலகப் பொதுமக்களுக்கு ஒரு சவாலான நேரம். உங்கள் அனைவருக்காகவும் நான் பிராத்தனை செய்கிறேன். மேலும் கடவுள் உங்களை எந்தவகையிலும் கைவிடமாட்டார், அவர் என்றும் மகிழ்ச்சியைத் தருவார். தயவுசெய்து பொதுமக்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் உலகை காக்க முயற்சிப்போம். ஏனெனில் நாம் அனைவரும் ஒன்று, நாம் அனைவரும் ஒரே உலகில் தான் வசித்து வருகிறோம். நாம் நம்மைப் பாதுக்காத்துக்கொள்வது போல பிற உயிர்களையும், இயற்கையையும் பாதுகாப்போம். நாம் பலமாகவும், ஒற்றுமையாகவும் இருப்போம் என நான் உறுதியாக நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இந்திய மகளிர் அணியில் யாரால் இரட்டை சதமடிக்க இயலும்? - பூனம் யாதவ் பளீச் பதில்!