யூ.எஸ்.ஓபன் 2020 டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப். 06) நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவாலோ இணை - ஜெர்மனியின் ஆண்ட்ரியாஸ் மிஸ், கெவின் கிராவிட்ஸ் இணையை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை கெவின் இணை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டு மற்றும் மூன்றாவது செட்டை ரோகன் போபண்ணா இணை 6-4, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதன் மூலம் யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்று ஆட்டத்தில் ரோகன் போபண்ணா, டெனிஸ் ஷபோவாலோ இணை 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கெவின் கிராவிட்ஸ், ஆண்ட்ரியாஸ் மிஸ் இணையை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
நாளை நடைபெறவுள்ள கால் இறுதி சுற்று ஆட்டத்தில் ரோகன் போபண்ணா இணை, ஜீன்-ஜூலியன் ரோஜர்(Jean-Julien Rojer) இணையை எதிர்த்து விளையாட உள்ளது.
இதையும் படிங்க:யூஎஸ் ஓபன் : நான்காம் சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்!